03 April, 2009

AIBSNLOA-DEV/NC/AT/REM BRANCH

Important Links: aibsnloachq / Circle / NFTETN / BSNLEU /Circle Office Branch/ Ch Telephones/ HR Package (தமிழில் வரும் முதல் அதிகாரிகள் சங்க வலைத் தளம் (வலையேற்றம் 22.6.11)
-----------------------------------------------------------------------------22.6.11:: சமீபத்திய CORPORATE அலுவலக தாக்கீதின் படி 1.1.2007 முதல் TIME BOUND PAY UPGRADATION கொடுக்கச் சொல்லி பல தோழர்கள் கடிதம் கொடுத்துள்ளார்கள். அந்த விஷயமாக நமது சங்க செயல் வீரர் தினகரன் அவர்கள் தொடர்ச்சியான முயற்சிகள் எடுத்துள்ளார். அவருக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்-------------------------------------------------------------------17/3/11::நண்பேன்டா>>>>>>>>>>>>>>>----------------------------------------------------------13/2/11:: கோவை நகரில் மாநிலச் செயற்குழுக் கூட்டம்மிகச்


சிறப்பாக நடை பெற்றது. கோ
வைத் தோழர்கள்


மிகச் சிறப்பானமுறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.


வருகை தந்த அனைத்துதோழர்களும் பாராட்டுக்கள்


தெரிவித்தனர். கூட்டத்தைப் பற்றியவிரிவான செய்திகள் மாநிலசங்க வலைத்தளத்தில் காண்க--------------------------------------------------------11.2.2011:: நமது மாநில செயற்குழுக் கூட்டம் கோவைநகரில் 12.2.11அன்று நடைபெறுகிறது. அறிவார்ந்தவிவாதங்களுடன் நமது இலாகாவின் நிலைபற்றியவிவாதங்கள் மற்றும் நமது சங்கஅமைப்பு நிலை விவாதங்களும் நடைபெறும்.விரிவான செய்திகள் விரைவில்.


------------------------------------------------------8.2.2011: PGM CFA அலுவலகத்தில் பணிபுரியும் திருமதி உஷா ராணி AGM அவர்களின் புதல்வர் விபத்தில் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் வேதனையுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்--------------------------------------------------------4/1/2011:: BSNL MS RR இல், Foot Note 2 உள்ள இடை கால தடை நீக்க நாம் தொடுத்த வழக்கானது 17.1.2011 அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது - மாநில செயலர் கைபேசி குறுஞ்செய்தி
---------------------------------------------------------------
அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
-----------------------------------------------------------------
16.12.2010:" உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே.....">>>>>>>>>>>>>>-------------------------------------------------------------------16.11.2010:: நமது மதிப்பிற்குரிய உறுப்பினர் திருமதி கீதா பாலசுப்பிரமணியன் அவர்களின் பிரிவு உபச்சார விழா நேற்று (15.11.10) மிகச் சிறப்பாகநடைபெற்றது. தோழியர் அவர்கள் சென்னை தந்திப் பகுதியில் 1974 அன்று டெக்னீசியனாக பணியில் சேர்ந்தார்கள். தனது சிறப்பான பணியின் காரணமான JTO பதவி உயர்வு பெற்று தற்போது விருப்ப ஓய்வில்சென்றுள்ளார். அவர்தம் ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துக்கிறோம். நேற்று(15.11.10) நடைபெற்ற கூட்டத்தில் தோழர் RRB, நமது இலாகா தற்போது சந்தித்து வரும் பல பிரச்சனைகளை பற்றி துல்லியமான தகவல்களை எடுத்துரைத்தார்கள். அனைத்துத் தோழர்களும் பல குழப்பமான பிரச்சனைகள் தோழர் உரைக்குப் பின்னர்தான் தெளிவு ஏற்பட்டதாகக் கூறினார்கள்.
தோழர் உரையின் முக்கிய அம்சங்கள்::* நமது சங்கத்தை முதலில் புறக்கணித்தவர்கள் தற்போது நமது சங்கம் தவிர்க்க முடியாத சங்கமாக மாறிவருகிறது என்பதை உணர்ந்துவருகிறார்கள். BSNL தலைமையகத்தில் பல பிரச்சனைகளை பற்றி நமது சங்கத்துடன் விவாதிக்கிறார்கள். * JTO to SDE DPC முதல் லிஸ்ட் ஒரிரு மாதங்களில் வெளியாகலாம். அடுத்த பட்டியல் வர சற்று காலதாமதமாகும்.* BSNL நிலைமைகளைப் பொருத்த வரை பல்வேறு செய்திகளை பல சங்கங்கள் கூறிவருகின்றன. சம்பளமே கொடுக்க முடியாத நிலைஎன்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அப்படிப்பட்ட கூற்றில் பல சந்தேகங்கள் பின்னணியில் இருக்கலாம். உண்மையான நிலவரம் பற்றி விரைவில் நாம் கூறுவோம்.* Functional promotion வழக்கில் நமது மத்திய பிரதேச மாநிலச் செயலர் படேல் அவர்கள் முக்கியமான பங்காற்றியிருக்கிறார்.* E1A, E2A Scale பற்றிய திடுக்கிடும் உண்மைகள் விரைவில் வெளியாகும். * பல துல்லியமான செய்திகள் RTI மூலமாக பெறப்படும் உண்மைகள்அனைத்தையும் நமது மத்திய சங்க வலைதளத்தில தொடர்ந்து காண்க.

----------------------------------------------------
அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி திரு நாள் நல் வாழ்த்துக்கள்
---------------------------------------------------
16.9.2010: கோட்டப் பொறியாளர் (Adhoc) பதவி ஏற்க கடைசி தேதி 15.11.2010 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது - மாநில சங்க செய்தி
நமது சங்க டைரி இந்த வருடம் மிக நேர்த்தியான வடிவில் வெளியாகிறது. சங்க வேறுபாடின்றி அனைத்து ஊழியர்களும்
பயன் பெற வேண்டிய பொக்கிஷம். பயன் பெருக...-----------------------------------------------

21.8.2010: DSC (அதாவது முன்னாள் DPC) விரைவில் JTO to SDE Officiating நடக்கவிருக்கிறது. SDE Officiating க்கு விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டும் (optees only) தேர்வு செய்யப்படுவர். மேலதிக தகவல்கள் நமது
மாநில சங்க வலைதளத்தில்.
------------------------------------------------------------
20.8.2010: கடந்த 14 15 ஆகஸ்ட் தேதிகளில் புவனேஸ்வரம் நகரில் நமது CWC மிகச் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் அதன் அறிக்கை வெளியாகும். படக் காட்சிகள் மற்றும் புகைப் படங்கள் நமது CHQ வலைதளத்தில் கண்டு இன்புறலாம்.

--------------------------------------------------------------
15/8/2010::
அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
--------------------------------------------------
14.8.2010: CWC news will be published soon
-----------------------------------------------------------
9/8/2010: our Circle Office Branch Website link given above
-----------------------------------------------------------------
24.7.10:::1.8.2010 நமது CWC மதுரை மாநகரில் நடக்க இருக்கிறது. அறிவார்ந்த விவாதங்களுடன் மீண்டும் சந்திப்போம்
-----------------------------------------------------------------
24.7.10: தொழில் நுட்ப கோளாறு காரணமாக TAMIL FONT-ல் பிழை எற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் நமது web மலரும்
---------------------------------------------------------------
8.7.10: Economic times today news:
''An internal panel of the telecoms ministry will submit its report within a month on proposals including a share sale and other restructuring plans for the state-run phone firm, Bharat Sanchar Nigam Ltd''
-----------------------------------------------------------------------------------
7.7.2010: IPO பற்றிய முடிவு இன்று எடுக்கப் படலாம் என்று பிரபல ஏடான எகனாமிக் டைம்ஸ் கூறுகிறது>>>>>சொடுக்கவும்<<<<<<<---------------------------------------------------------------------------
3.6.2010 மேற்கு வங்கத்தில் புரட்சீசீ... AIBSNLOA சங்கம் மேற்கு வங்க மாநிலத்தில் உதித்திருக்கிறது. அதன் மாநிலச் செயலராக தேர்வு செய்யப் பட்ட தோழர் மொண்டல் அவர்களை தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. வாழ்த்துக் கைபேசி குறுஞ்செய்தியும் அனுப்பப் பட்டது.
------------------------------------------------------------
20.5.10: A meeting will be conducted to have a detailed discussion of the ensuing transfer of LONG STAY JTOs/SDEs. We propose to conduct the same very soon.
-------------------------------------------------------
19.5.10: Please visit our CHQ site for long stay particulars of SDEs
---------------------------------------------------------
19.5.10:
Due to non-functioning of Tamil Font, we could not update our site. Soon the snag will be set right. Till then, we continue to update the site with our international mother tongue "English".
---------------------------------------------------------------
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
-----------------------------------------------------------------
20.4.2010::: Strike called off. வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது. விபரங்கள் விரைவில் அறிவிக்கப் படும். ( மாநிலச் செயலர் கைபேசி குறுஞ்செய்தி)---------------------------------------------------------------------19.4.2010: Our CHQ calls upon its members to join the Indefinite Strike from April 20, 2010 ( If it takes place)
------------------------------------------------------------------
10.4.2010:: தமிழ் மாநிலம் மற்றும் சென்னைத் தொலைபேசி இணைந்து நடத்திய மாநில மாநாடு மிகச் சிறப்பாக சென்னை புரசை பகுதியில் உள்ள தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெற்றது. குமரி முதல் வட வேங்கடம் (சென்னை) வரை உள்ள தமிழ்கூறு நல்லுலகத்திலிருந்து சார்பாளர்கள் வந்திருந்தது நமது சங்க கட்டுறுதியை பறைசாற்றியது. தோழர் மனோகரன் மற்றும் தோழர் ராஜசேகரன் முறையே மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலர் கொண்ட மாநில சங்க நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டனர். மாநில மாநாட்டிற்கு பம்பரமாக சுழன்ற தோழர்கள் குறிப்பாக நமது கிளைத் தோழர்கள் லோகநாதன், கேஜிஎஸ், ரவிச்சந்திர நாராயணன், பசுபதி ஆகியோருக்கு எமது நன்றி
மாநாட்டைப் பற்றி பத்திரிகை செய்தி>>>>சொடுக்கவும்<<<<<<----------------------------------------------------------------------------------------27.3.2010:: நமது மாநிலச் சங்க வழிகாட்டுதல் படி 26.3.2010 அன்று CGM அலுவலகம் முன்பாக நடைபெற்ற மாபெரும் தார்ணா போராட்டத்தில் நமது கிளைச் சங்கத் தோழர்கள் KGS, லோகநாதன், பத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். STR கிளைச் செயலர் தோழர் தீனதயாளன் கலந்து கொண்டார். தோழர்கள் பட்டாபி NFTE மற்றும் செல்லப்பா BSNLEU, தனிப்பட்ட நன்றியை நமது சங்கத்திற்குத் தெரிவித்தார்கள்.வருங்காலத்தில் இதே ஓற்றுமை பேணப் படும் என்பதே நமது அவா.---------------------------------------------------------------------19.3.2010:: குறிப்பிட்ட கேடர்களில் அதிகப் படியான ஊழியர் இருக்கும் இடத்தில் VRS என்று இலாகா போர்ட் கூறுவது எந்த இடத்தை.....?( It favours VRS in specific cadres with surplus staff. The board is also in favour of a series of small, specific VRS schemes......)
>>>>>>மேலதிகச் செய்திகளுக்கு சொடுக்கவும்<<<<<<<
-------------------------------------------------------------------
11.3.10: கடந்த புதன் அன்று நடைபெற்ற இலாகா போர்ட் கூட்டத்தில் திரு பித்ரோடா அளித்திட்ட அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. (30 சத பங்கு விற்பனை, 1 லட்சம் ஊழியர் குறைப்புத் திட்டம் போன்றவை) அரசிற்கு இந்தத் தீர்மானம் அனுப்பப் பட்டத்தாகத் தெரிகிறது.
>>>>மேலதிகச் செய்திகள்<<<<
---------------------------------------------------------------------
8.3.10: கடந்த வெள்ளி அன்று நடைபெற்ற BSNL போர்ட் கூட்டத்தில் 5 சதம் Private Placement மற்றும் 5 சதம் பொது பங்கு விற்பனையும் செய்யவிருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதை இந்தச் செய்தி கூறுகிறது
>>>>>>>>>>சொடுக்குக<<<<<<<
------------------------------------------------------------------------
8.3.10: நமது இணைந்த மாநில மாநாடு (தமிழ் மாநிலம் மற்றும் சென்னைத் தொலைபேசி) ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளதை அறிந்திருப்பீர்கள். அறிவுசார் மாநாட்டுக்கு அனைவரையும் அழைக்கிறோம். (ஒவ்வொரு தோழரும் மாநாட்டிற்கு ரூ 500/- நன்கொடையளிக்க வேண்டுகிறோம்)
-----------------------------------------------------------------------------
3.3.10: வந்தாச்சு.... வந்தாச்சு..... நம்ம குண்டு...........<<<>>>>>.

------------------------------------------------------------------------
26.2.10: வருமான வரி பிடித்தம் இனிமேல் ரூ 1.60 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சத கழிவுதான் என்று பட்ஜெட்டில் சொல்லப் பட்டுள்ளது, மேலும் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதம் என்று்ம்முடிவெடுக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்க மாறுதல்தான்.. 60 சத ஊதியதாரர்களுக்கு இதனால் பலன் கிடைக்கும் என்று தெரிகிறது.. நிதி அமைச்ருக்கு நமது நன்றியை நாம் தெரிவித்துக் கொண்டாலும், இந்தச் சலுகை கடந்த நிதியாண்டில் கிடைத்திருந்தால் நமது நிலுவைத் தொகையை கணிசமாக கையில் பார்த்திருக்கலாம் என்ற ஏக்கப் பெருமூச்சு உங்களிடமிருந்து இந்த வலைத் தளம் வரை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.----------------------------------------------------------------------22.2.10: இனி பணம் அனுப்ப SMS போதும்.. நமது இலாகாவின் அடுத்த புரட்சிகர திட்டம். உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டுமா..? உடனே BSNL செல்பேசியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்...<< மேலதிகத் தகவலுக்கு இங்கு சொடுக்கவும்>>
----------------------------------------------------------------------------
19.2.2010: நமது மாநில நிர்வாகம் இட மாற்றத்திற்குள்ளாகும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டது முதல், அதிகாரிகள் மத்தியில் பல்வேறு கேள்விகள் விளங்கங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மாற்றலுக்காக மாற்றல் இருக்க முடியாது. இட மாற்றம் என்பது ''கொள்கை'' என்ற பின்னர், தவறில்லாமலும், வீண் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமலும் இருத்தல் வேண்டும் என்பது நமது ஆணித்தரமான நிலைபாடு. மேலும் தற்போதுள்ள சூழலில் இரண்டு வருடத்திற்கு மாற்றல் என்பதையே நிறுத்தி வைப்பது வீண் செலவுகளையும் குறைக்கும் என்றே நமது மத்திய சங்கம் கருதுகிறது. இது சம்பந்தமாக அகில இந்திய நிர்வாகத்திற்கு நமது வணக்கத்திற்குரிய பொதுச் செயலர் தோழர் ஆர்யா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை மத்திய சங்க வலைத் தளத்தில் காண்க. தற்போது இந்தப் பிரச்சனையை ஒட்டி சில யோசனைகளை மாநிலச் சங்கம், மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. <<<<< கடிதத்தைப் படிக்க இங்கு சொடுக்கவும்>>>>>

--------------------------------------------------------------------
9.2.2010: முதலில் பங்கு விற்பனை என்றார்கள் தற்போது Private Placement of 5 to 10% shares என்று சொல்கிறார்கள். தொடர்ச்சியாக வரும் செய்திகளைக் கண்டு ஊழியர்கள் நமது இலாகாவில் என்ன நடக்கிறது என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்
. செய்தியை படிக்க இங்கு சொடுக்கவும்

-------------------------------------------------------------
1/2/2010: நமது மாநிலச் செயற் குழுக் கூட்டம் 30.1.10 அன்று குடந்தை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்து SSA களிலிருந்தும் திரளான தோழர்கள் - மாவட்டச் செயலர்கள் செயல்வீரர்கள் - கலந்து கொண்டது நமது சங்கத்தின் மேல் உள்ள பற்றுறுதியைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. செயற்குழுவில் எப்ரல் 8, 9 அன்று சென்னையில் நடைபெற உள்ள இணைந்த மாநில மாநாட்டை (தமிழ்மாநிலம் மற்றும் சென்னைத் தொலைபேசி) வெகு சிறப்பாக நடத்த அனைத்து வகை நடவடிக்கைளையும் ஏற்பதாக தோழர்கள் முன்வந்தனர். ஒவ்வொரு உறுப்பினர்களிமிருந்தும் ரூ 500/- மாநில மாநாட்டு நன்கொடையாக பெறவும் முடிவெடுக்கப் பட்டது. மாநாட்டிற்கு ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் செயல் வீரர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது தோழர்களை உற்சாக மூட்டியது. விரைவில் விரிவான செய்திகள் வெளியிடப்படும்
----------------------------------------------------------------------
23.1.10:: கோவை மற்றும் நீலகிரியில் நமது இலாகாவின் 3ஜி சேவை இனிதே துவக்கம். நாளை உலகை ஆளப் போகும் 3ஜி சேவையை நாம் முதன் முதலாக துவங்கியதை, சரித்திரத்தின் பொன் ஏடுகளிலிருந்து எவராலும் எடுக்க முடியாது.. மறுக்க முடியாது.. வாழ்க BSNL வளர்க..
-------------------------------------------------------------------
22.1.10: வரும் தமிழ் மாநில மாநாட்டைப் பற்றி விவாதிக்க, 30.1.10 அன்று குடந்தை நகரில் கூடுவோம். (மாநில சங்க அறைகூவல்.) மேலதிக செய்திகள் மாநில சங்க வலைதளத்தில்.
------------------------------------------------------------------------
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------
6.1.2010: தலைநகர் தில்லியில் நிலவும் கடுங்குளிர் காரணமாக, நமது CWC தள்ளி வைக்கப் பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் அடுத்த தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


------------------------------------------------------------------------
2.1.2010: இலாகாவின் 93 மிலியன் செல் சேவைக்கான டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகமே (PMO) இதற்கான காரணத்தை அறிய ஜனவரி 6 அன்று மாண்புமிகு தொலைத் தொடர்பு அமைச்சர், மாண்புமிகு நிதி அமைச்சர், DOT செயலர் திரு தாமஸ் அவர்கள், நமது CMD திரு குல்தீப் கோயல் அவர்கள் ஆகியோரைச் சந்தித்து விவாதிக்கயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் கூட்டத்தில் டெண்டர் குளறுபடிகள் மட்டுமல்லாது நமது இலாகாவின் பெருகி வரும் வருவாய் இழப்பு, மார்க்கெட் இழப்பு ஆகியவற்றையும் பற்றிய விவாதங்கள் இருக்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலதிகச் செய்திகள் நமது மத்திய சங்க வலைத் தளத்தில் காண்க
-------------------------------------------------------------------
1.1.10: IDA அதிகாரிகளுக்கு 5.6சதம். C மற்றும் D பிரிவு தோழர்களுக்கு 9.4 சதம்
--------------------------------------------------------------------
2010 அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
WISH YOU ALL A HAPPY NEW YEAR 2010
-----------------------------------------------
26/12/09: நமது சங்க CWC புதுதில்லியில் 7 மற்றும் 8 ஜனவரியில் கூடுகிறது. மிக முக்கியமான செய்திகள் முடிவுகள் எடுக்கப் படவுள்ளன. அதற்கான அறிவிப்பு <இங்கே>>>. விரிவான செய்திகள் விரைவில் வெளியிடப்படும்
26/12/09: நமது IDA எவ்வாறு கணக்கிடப் படுகிறது என்பதைப் பற்றிய துல்லியமான கணக்கு ஒன்றை நமது மத்திய சங்கம் வெளியிட்டிருக்கிறது. படிக்க இங்கே சொடுக்கவும்>>>>>>>>>>>>
-----------------------------------------------------------------------
25/12/09:
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்
-----------------------------------------------------------------------
21/12/2009: சிவபெருமானின் மூன்றாவது கண்ணைப் போன்றதுதான் நமது இலாகாவின் 3G என்பது. அந்த ஒளியின் மூலம் நமது போட்டியாளர்களை சாம்பலாக்கிவிடலாம். ஆம் பல மென்துறை நிறுவனங்கள் நமது இலாகாவின் 3G- யை பயன் படுத்துவதே அதற்கான உரைகல். மேலதிக செய்திகளுக்கு இங்கு சொடுக்கவும்>>>>>>>>
---------------------------------------------------------------------------
10/12/2009: JTO DR போட்டித் தேர்வில் கலந்து கொண்ட நமது இலாகா TTA தோழர்கள் (பொறியியல் தகுதி உள்ளவர்கள்) JTO ஆன பின்னர் அவர்களுக்கு புதிய hrms வழங்கச் சொல்லி நிர்வாகம் உத்தரவிட்டது. அதனால் அவர்கள் பழைய சேவைக் காலம், விடுமுறை போன்ற பல அம்சங்கள் பாதகமாகும் சூழல். இதனை பாதிக்கப் பட்ட பல தோழர்கள் முறையிட்ட வண்ணம் இருந்தனர். நமது மாநிலச் சங்கம் மின்னல் வேகத்தில் இந்தப் புதிய சிக்கலை CHQ வில் தெரிவித்தவுடன், நமது பொதுச் செயலர் புயல் வேகத்தில் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி இது பற்றிய விரிவான செய்திகள் நமது மத்திய சங்க வலைத் தளத்தில். கடிதத்தைப் படிக்க இங்கு சொடுக்கவும்>>>>>>>>>
--------------------------------------------------------------------------------
8/12/2009: மதிப்பிற்குரிய பென்ஜமின் DGM அவர்களின் பிரிவு உபச்சார விழா மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியது. கூட்டத்தில் பேசிய பலரும் அன்னாரின் எளிமையை வியந்து போற்றினர். உயர்ந்த பதவிக்கு வந்த பின்னரும் வெள்ளத் தனைய மலர் நீட்டம் என்பதைப் போல அவரின் மனித நேயத்தின் பலனாக, மாற்றுச் சங்கம் என்றாலும் தோழர்கள் ரங்க ராமானுஜம் AGM. பாலசுந்தரராஜ் SDE. ராமானுஜம் SDE போன்ற பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். தோழர்கள் பாலு சார் all india vice president, இலாகாவின் தற்போதைய நிலைமையை பற்றிய விரிவான உரையை தந்த தோழர் RRB, ஆழமான உரையாற்றிய மாநிலச் செயலர் ராஜசேகர், தினகரன், பசுபதி, சந்திரசேகர் AGM, KGS. தீனதாயளன், ரவிச்சந்திர நாராயணன் என்று பலரும் அந்த மாலைப் பொழுதிற்கு இனிமையையும், செவிக்குணவையும் வழங்கினர். பென்ஜமின் அவர்களின் எற்புரை மனதைத் தொடும் வகையில் இருந்தது. தோழியர் உஷாராணி அவர்கள் தலைமையேற்க, பத்ரிநாத் வரவேற்புரையும், தோழர் லோகநாதன் நன்றியுரையும் ஆற்றினார்கள். விழாவை நடத்த பம்பரமாக சுழன்ற தோழர் லோகநாதன் அவர்களுக்கு பிரத்தேயக நன்றி.
-------------------------------------------------------------------------
3/12/2009: ''என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்...."
தோழர்களே.. நமது கிளை சங்கத் தலைவர் மதிப்பிற்குரிய பென்ஜமின் DGM அவர்கள் பணி ஓய்வு பெற்றதையடுத்து ஒரு பிரிவு உபச்சார விழா ஒன்றை நடத்திட வேண்டும் என்பது நமது உறுப்பினர்கள் உள்ளக் கிடக்கை. அதைக் கணக்கில் கொண்டு அவருக்கு ஒரு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.
நாள் 8.12.2009 நேரம் மாலை 3.30 மணி. இடம் கீரிம்ஸ் சாலை NC அலுவலக Recreation club அறை. அனைவரும் வருக.
------------------------------------------------------------------------
30/11/2009: Today our Branch President Sri BENJAMIN DGM retiring on superannuation. We wish him a HAPPY RETIRED life.
திரு பென்ஜமின் DGM அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறோம்.
------------------------------------------------------------------
21/11/09: முப்பது பைசாவில்... முகத்தில் முகம் பார்க்கலாம்... 3ஜி புரட்சி மேலதிகச் செய்திகள் இங்கே>>>>>>>>>
-------------------------------------------------------------------
20/11/09: SDE Officiating கான காலக் கெடுவை Circle Office 27.11.2009 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
------------------------------------------------------------------
15/11/09: BSNL உட்பட பல்வேறு PSU களின் பங்கு விற்பனைக்கான பாதைகள் திறப்பு மத்திய அரசு முடிவு இந்து நாளேடு செய்தி- மேலதிகச் செய்களுக்கு இங்கு சொடுக்கவும்
-----------------------------------------------------------------------
6/11/2009: BSNL 10 சத பங்கு விற்பனையை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது
JAO Intl போட்டித் தேர்வு ஜனவரி மாதத்திற்குத் தள்ளி வைக்கப் பட்டுள்ளது
---------------------------------------------------------------------
1/10/2009: மாநிலச் செயலர் கைபேசி செய்தி:
1) எந்த வெட்டும் இல்லாமல் 60% நிலுவைத் தொகை. 2) DGM பதவிக்கான தேர்வுக்கு அலகாபாத் நீதி மன்றம் தடை
BSNL IPO அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இருக்கும் என்று CMD பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்
--------------------------------------------------------------------21/9/09: AIBSNLOA எனும் மணிமகுடத்தில் மேலும் இரு வைரங்களாக, கர்நாடக மாநிலம், மற்றும் மத்திய பிரதேச மாநிலம் ஆகியவற்றில் புதிய மாநில சங்கங்கள் திகழ்கின்றன. திரு அருண்குமார், கர்நாடக மாநிலச் செயலர், திரு படேல் எம்பி மாநிலச் செயலர் ஆகியோரை நமது கிளை வாழ்த்துகிறது. கைபேசியில் அவர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. வருங்காலத்தில் AIBSNLOA பெரும் சக்தியாக தமது மாநிலங்களில் உருவாகும் என்று தெரிவித்தனர். பூட்டிய இரும்புக் கதவுகள் திறந்தன... சிறுத்தையே வெளியே வா... என்ற பாவேந்தர் பாடல்கள் நினைவுக்கு வருகிறது...
வாழ்க.. வெல்க AIBSNLOA
----------------------------------------------------------------------------
18/9/09: இந்த ஆண்டு இலாபத் தொகையைக் காரணம் காட்டி BSNL போனசைக் குறைத்து வழங்கியுள்ளது >>>>சொடுக்கவும்>>>>>
----------------------------------------------------------------
9.9.09: PERKS ORDERS ISSUED by BSNL - வழ்ங்கப்பட்டுள்ள PERKS என்னும் கூடுதல் படிகளால் பயன் ஒன்றும் இல்லை
-----------------------------------------------------------------
31/8/09: AT&T என்ற அமெரிக்க நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம். இந்நிறுவனம் நமது BSNL-ல் முதலீடு செய்ய ஆராய்ந்து வருவதாக இந்தச் செய்தி கூறுகிறது >>>>>>>>>
-----------------------------------------------------------------
15.8.09 :: இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------
6.8.09: நமது மாநில சங்க அறைகூவலுக்கு இணங்க, நமது முன்னணித் தோழர்கள் லோகநாதன், கேஜிஎஸ், ரவிச்சந்திர நாராயணன் ஆகியோர் இனணந்து மக்களைச் சந்தித்து சர்வே கேள்விபதில்களைப் பெறுவோம்.. நமது இலாகாவின் வளர்ச்சிக்குத் துணை நிற்க உறுதி கொள்வோம்.
------------------------------------------------------------
21.7.09 :: BSNL பங்குகள் விற்பனைத் தொடர்பாக முனைப்பான பேச்சு வார்த்தைகள் நடை பெற்று வருகின்றன. மாண்புமிகு குருதாஸ் காமத் இலாகாவின் துணை மந்திரி ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்திலும் இதைப் பற்றித் தெரிவித்துள்ளார். மேலதிகச் செய்திகள்>>>>>>>>>>>>>
---------------------------------------------------------------------
20/9/07: நமது மாநிலச் செயற்குழுக் கூட்டம் வரும் 25.7.09 சனிக் கிழமை காரைக்குடியில் நடைபெறும். மேலதிகச் செய்திகள் நமது மாநிலச் சங்க வலைதளத்தில் காண்க
----------------------------------------------------------------------
9/7/09: சென்னைத் தொலைபேசி மற்றும் தமிழ்மாநில சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் 8.7.09 அன்று நடைபெற்றது. முன்னணித் தோழர்கள் பங்கேற்றனர். விரைவில் நமது சங்கம் அகில இந்திய அளவில் பெரும் சக்தியாக உருவாகும் என்பதை அனைவரும் உணர முடிந்தது..
------------------------------------------------------------------
9.7.09: பட்ஜெட்டில் பங்கு விற்பனை குறித்து முடிவு ஏதும் இல்லையென்றாலும், அயல்நாட்டு நிறுவனங்களின் கைகளில் BSNL
செல்லுமா......? செய்தி>>>>>>>>>>>>>>>>>>
-----------------------------------------------------------------
23/6/09: பட்ஜெட்டில் BSNL பங்கு விற்பனை பற்றி அறிவிப்பு வெளியாகும்....? >>செய்தி<<<<<


--------------------------------------------------------------


15/6/2009: SMS மூலமாக தொலைபேசித் தொகையை செலுத்தும் முறை அறிமுகப் படுத்தியது BSNL. உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள கடைகளில் விற்கப் படும் வவுச்சரை வாங்கிப் பயன் பெறுங்கள். >>>செய்தி<<<


---------------------------------------------------------------


4/6/09: IPO (பங்கு விற்பனை) பற்றிய செய்திகளை வட இந்திய நாளேடுகள் மேலும் மேலும் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.


செய்தி 1 செய்தி 2


----------------------------------------------------------------------


3/6/2009: IPO (பங்கு விற்பனை) பற்றி மேலும் செய்திகள் நாளேடுகளில் வந்த வண்ணம் உள்ளன... உங்கள் பார்வைக்கு சில செய்திகள்.......


செய்தி 1>>>>>>>BSNL பங்கு விற்பனை நமது முதன்மைப் பணி- அமைச்சர் மாண்புமிகு ராசா>>>>


செய்தி 2>>>>>பங்கு விற்பனை குறித்து ஒருமித்த கருத்து>>>>>>>


செய்தி 3>>>>>நிதி அமைச்சகத்திடம் IPO க்கு செல்ல விரும்புவதாக BSNL Administrative Ministry தகவல்>>>>>>>


-------------------------------------------------------------------


2/6/2009: நமது இலாகா அமைச்சர் மாண்புமிகு ராசா அவர்கள், BSNL பங்கு விற்பனை தொடர்பாக, இலாகாவில் இயங்கும் தொழிற் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை துவக்க அறிவுறுத்தியிருக்கிறார் >>>>>மேலதிகச் செய்திகளுக்கு இங்கு சொடுக்கவும்>>>>>>>
-----------------------------------------------------------------


23/5/2009: ரா...ரா...saleக்கு ரா...ரா....>>>>>செய்தி>>>>>


--------------------------------------------------------------


22/5/2009: அண்ணா சாலையை அழகு படுத்தும் BSNL >>>செய்தி>>>


--------------------------------------------------------------


19/5/2009: BSNL வழங்கும் புதிய ப்ரீ-பெய்ட் வவுச்சர்கள் ரூ 300/- தமிழகமெங்கும் தடையின்றி இலவச அழைப்புகள் >>>>மேலதிகச் செய்திகள்>>>>>>


-----------------------------------------------------------------


15.5.2009: இன்றய செய்திகள்


1) JTO TO SDE (Promotee quota) உத்தரவு வெளியிடப்பட்டது


2) CCS (Pension) Rules, 1972 , applicable to BSNL Pensionersக்கான Amendments வெளியீடு ஆகியவை... மேலதிக செய்திகள் நமது மத்திய சங்க வலைதளத்தில்....


----------------------------------------------------------------------------


11.05.2009: நமது மத்திய சங்கம் ஊதிய மாற்ற கால வரம்பு பற்றிய ஓர் ஆய்வினை செய்திருக்கிறது. மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களின் ஊதிய மாற்றத்தின் போது இந்தப் பிரச்சனை தற்போது எழுந்துள்ளது. 5 வருடம் மற்றும் 10 வருடங்களில் ஊதியத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துச் சொல்லும் இந்த ஆய்வு, இதைப் பற்றிய ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்றே கூறத் தோன்றுகிறது. மேலதிக விவரங்கள் நமது மத்திய சங்க வலைத் தளத்தில்.......


--------------------------------------------------------------------------------


8/5/2009: நமது வலைத் தளத்தில் அவ்வவ்பொழுது சர்வேக்கள் நடந்தி வந்துள்ளோம். நமது வலைத் தளப் பார்வையாளர்கள் அனைவரும் அறிவார்ந்த பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதுதான் அதற்கான காரணம். அவ்வண்ணம் சமீபத்தில நடத்திய சர்வே ஒன்று, நமது துறையின் IPO பற்றியதாகும். அதில் பங்கேற்ற அனைவரும் 100 சதம் நமது துறையில் IPO தேர்தலுக்குப் பின் அறிவிக்கப் படும் என்று வாக்களித்திருக்கிறார்கள். ஆம் நிச்சயம் உண்மை அதுதான். மேலும் நமது துறையில் நடக்கும் நடப்புகளும் அப்படியே, உண்மையின் உரைகல்லாக விளங்குகிறது.


பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


----------------------------------------------------------------------------


8.5.2009 : See our Circle Office Branch Website for transfer orders for SDE, Tamilnadu Circle


------------------------------------------------------------------------


5/5/2009: மீண்டும் கோகிலா >>>>>செய்தி>>>>>


--------------------------------------------------------------------------


4/5/2009: மாணவர்களுக்கான தனிச் சிறப்பு வாய்ந்த - விலை குறைந்த ஒரு சிம் கார்ட் அறிமுகப் படுத்தியது BSNL >>> சொடுக்கவும்>>>>


---------------------------------------------------------------------


1/5/2009:: "உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல், என் தோழா...."


அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்


------------------------------------------------------------------


28/4/2009: மாத வாடகை ரூ 50 மட்டும். 150க்கும் மேலான டிவி சேனல்கள், ப்ராட்பேண்ட் வசதி, தொலைபேசி வசதி மற்றும் வீடியோ இசை இன்னும் பற்பல வசதிகள் என IPTVயில் வாரி வழங்குகிறது சென்னை BSNL >>>>மேலதிகச் செய்திகள்>>>>>


-----------------------------------------------------------------------


27/4/2009:: The Mobile Store என்கிற பெயரை நீங்கள் சென்னை நகர் எங்கும் பார்த்திருக்கலாம். (Chain of Mobile set sales Shop). தற்போது முதல் முறையாக The mobile Store ல் நமது தயாரிப்புகள் கிடைக்கும் >>>>செய்தி>>>>


--------------------------------------------------------------


23/4/2009:: இனி ATM- மில் பிரச்சனையில்லாமல் பணம் எடுக்கலாம்>>>செய்தி>>>


--------------------------------------------------------------------


22/4/2009:: ஓர் இன்ப அதிர்ச்சி >>>>>சொடுக்கவும்>>>>>


------------------------------------------------------------------


21/4/2009:: திரைகடலோடி திரவியம் தேடும் BSNL>>>> செய்தி>>>>


----------------------------------------------------------------


20.4.2009:: விரைவில் வருகிறது IPTV>>>>>>>>>>


----------------------------------------------------------------


14.4.09::


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு..."


அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


------------------------------------------------------------------


13.4.2009:: அயல் நாட்டில் தொலைத்தொடர்புக் கம்பெனிகளை வாங்குகிறது BSNL செய்தி>>>>>>>>>>


----------------------------------------------------------------


9.4.2009:::: அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 14.4.2009 அன்று அரசு விடுமுறை அளிக்கப் படுகிறது.. உத்தரவுக்கு நமது மாநில அலுவலகக்கிளை வலைத் தளத்தில் காண்க.


--------------------------------------------------------------


3.4.09: 9. 4% DA 1.1.2007 முதல் சம்பளத்துடன் இணைக்க வேண்டும்.. அதுவும் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்... DPE உத்தரவு... (நன்றி: மாநிலச் செயலர் கைபேசி குறுஞ்செய்தி ) மேலதிகச் செய்தி CHQ வலைத் தளத்தில்............


---------------------------------------------------------


1.4.2009:: நமது மாநில சங்கம் GM(F) அவர்களிடம் 1.1.2007 அன்று INCREMENT பெறும் தோழர்கள் சம்பந்தமாக தொடர்ந்து பேசி வந்தது. தற்போது நமது மத்திய சங்கம் இந்தப் பிரச்சனையை குறிப்பாக அழுத்தம் கொடுத்து நிர்வாகத்திடம் பேசி வந்தது. "After meeting GM (F) on 12.3.09, we had reported that GM (F) had agreed that officers whose increment date falls on 1.1.2007 will have their pay fixed with reference to their pay as on 31-12-2006 in the pre-revised scale and will draw their increment due on 1-1-2007 in the revised scale. ......Now BSNL has issued clarifications, vindicating our stand........'' இது பற்றிய மேலதிக செய்திகள் நமது மாநில சங்க் வலைத்தளத்தில்